காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த +1, +2 மாணவர்கள் கவனத்துக்கு..

கடந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் 2020ல்,  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) துணை பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் மறுமதிப்பீடு மற்றும்  மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலா

News image
மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த +1, +2 மாணவர்கள் கவனத்துக்கு..
Updated On :11 டிசம்பர் 2020, 12:25 pm

DIN

கடந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் 2020ல்,  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) துணை பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் மறுமதிப்பீடு மற்றும்  மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நடைபெற்ற செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டல் (ரீ-டோட்டல்) மற்றும் மறுமதிப்பீடு (ரீவேலுயூஷன்) கோரி விண்ணப்பித்தவர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 15.12.2020 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியலில் மாற்றம் இல்லாத தேர்வெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.