தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொங்கல் திருநாள்: பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்

ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு வசதி இன்று முதல்தொடங்குகிறது

News image
பொங்கல் திருநாள்: பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்
Updated On :27 ஜனவரி 2024, 6:05 pm

DIN

ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு வசதி இன்று முதல் தொடங்குகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள ஏதுவாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான வசதி தமிழகம் முழுவதும் இன்று முதல் (11.12.2020) தொடங்குகிறது. 

பொது மக்கள் இந்த வாய்ப்பினை  பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யப்படும் வலைத்தளங்களின் விவரம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள நடைமுறையிலுள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app,  ஆகியவற்றில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கண்ட இத்தகவலை அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கே. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.