தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image

மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல்

Updated On :12 டிசம்பர் 2020, 6:36 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மன்னார்குடியில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், புதுதில்லியில் தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மன்னார்குடி மேல ராஜவீதியில் உள்ள தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன் தலைமை வகித்தார்.

Story image

இதில், தமிழர் தேசிய முன்னணி மாவட்டச் செயலர் ச.கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு மாவட்ட நிர்வாகி சு.செந்தில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வரதராஜன், ஒளிச்சந்திரன,அ. இராமலிங்கம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஆதரித்தும் முழக்கங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.