ரஜினிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து (கோப்பிலிருந்து)
ரஜினிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து (கோப்பிலிருந்து)
Updated on
1 min read


சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள், நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!

நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அரசியல் கட்சித் தொடங்கவிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி, நடிகர், நடிகையர், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com