பழமையான பொருள்கள் அரசுக்கு மட்டுமே சொந்தம்: அமைச்சர்
நூறாண்டுகளுக்கு மேல் பழமையான பொருட்கள் அரசுக்குத்தான் சொந்தம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


நூறாண்டுகளுக்கு மேல் பழமையான பொருட்கள் அரசுக்குத்தான் சொந்தம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரில் 500 ஆண்டுகள் பழமையான குழம்பேஸ்வரர் ஆலய புதுப்பிக்கும் பணியின்போது தங்கப்புதையல் கிடைத்துள்ளது.
500 ஆண்டு கால பழமையான கோவிலை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அனுமதியின்றி அப்பகுதியைச் சார்ந்த நபர்கள் இடித்து தரைமட்டமாக்கி புதிதாக ஒரு கோயில் கட்டுவதற்கு தீர்மானித்தது சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் போது கோயில் நுழைவாயில் உள்ள படிக்கட்டின் கீழ் தோராயமாக 100 சவரன் தங்க நகைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
புதையலாகக் கிடைத்த பழங்காலத்து தங்கத்தை அப்பகுதி மக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கோயிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல் 100 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தால் அது அரசுக்குத்தான் சேரும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறைக்கோ, கிராமத்திற்கோ சொந்தமான கோயில் என்றால் அரசிடம் நகைகளை ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நகைகளை காட்சிப்படுத்த வேண்டுமா? அல்லது கோயிலில் வைக்க வேண்டுமா என்பதை அரசே முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...