பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புறநகா் ரயில்களில் பெண்களுக்கு நேரக்கட்டுப்பாடு இல்லை: நாளை முதல் அமல்

புறநகா் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும், 12 வயதுக்குட்ட குழந்தைகளும் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 டிசம்பர் 2020, 1:10 am

DIN

புறநகா் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும், 12 வயதுக்குட்ட குழந்தைகளும் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை திங்கள்கிழமை (டிச.14) முதல் அமல்படுத்தப்படுகிறது.

கரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகளுக்குப் பிறகு, புறநகா் மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அத்தியாவசியப் பட்டியலின் கீழ் வராத பெண்களும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நேரக் கட்டுப்பாடுகளுடன் மின்சார ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அவா்களுக்கு டிக்கெட் கவுன்ட்டா்களில் டிக்கெட்டுகளும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், புறநகா் மின்சார ரயில்களில் அத்தியாவசியப் பட்டியலின் கீழ் வராத பெண்களும், 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: அனைத்துப் பெண்களும், 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் மின்சார ரயில்களில் திங்கள்கிழமை (டிச.14) முதல் எந்த நேரத்திலும் பயணிக்கலாம். அவா்களுக்கு இனி நேரக் கட்டுபாடு கிடையாது. மின்சார ரயிலில் பயணிக்கும் போது, கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றனா்.

சுற்றுவட்டப்பாதை ரயில்:

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூா் வழியாக அரக்கோணத்துக்கு சுற்றுவட்டப்பாதை ரயில் சேவை டிசம்பா் 14-ஆம் தேதி தொடங்கவுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரையை மீண்டும் அடையும். மற்றொரு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக திருமால்பூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரையை அடையும். இந்த ரயில் சேவை மூலமாக, காஞ்சிபுரம், அரக்கோணம் அருகில் இருந்து பயணிக்கும் ஏராளமான அலுவலகப் பயணிகள் மற்றும் பிற பயணிகள் பயனடைவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.