சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த நோயாளிகளில் இதுவரை 97 சதவீதம் பேர் குணமடைந்தனர். தற்போது மொத்த பாதிப்பில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2.20.560 ஆக உள்ளது. இவர்களில் இதுவரை 2,13,509 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் இது 97 சதவீதம் ஆகும். கரோனா பாதித்தவர்களில் 3,929 பேர் அதாவது 1.78 சதவீதம் பேர் பலியாகிவிட்டனர்.
புதன்கிழமை காலை நிலவரப்படி 3,122 பேர் மொத்த பாதிப்பில் வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அடையாறு மண்டலத்தில் மட்டுமே 419 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோடம்பாக்கத்தில் 342 பேரும், அண்ணாநகரில் 366 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் கரோனாவுக்கு இதுவரை 500 பேர் பலியாகியுள்ளனர். அண்ணாநகரில் மட்டும் இதுவரை 23,465 பேர் குணமடைந்துளள்னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிவாயு தட்டுப்பாடு? கத்தார் செல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!

🔴கேரளம்: வாக்காளர்களுக்கு சாதகமாக வெய்யில் நிலவரம் - செய்திகள் உடனுக்குடன்!

அச்சமற்ற புதிய அஸ்ஸாம் உருவாகும்: வாக்களித்தார் கௌரவ் கோகோய்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்; ஜனநாயகக் கடமையாற்றிய ராஜீவ் சந்திர சேகர்! | BJP
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


