11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

அண்ணா பல்கலை. மாணவர்கள் 6 பேருக்கு கரோனா உறுதி

அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :16 டிசம்பர் 2020, 5:57 am

அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை ஐஐடியில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை ஐஐடியில் ஆய்வு செய்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் விடுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இதில் சென்னை மாநகராட்சி மருத்துவக்குழு நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று உறுதியான 3 மாணவர்கள், 3 மாணவிகளுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அவர்கள் கிங்ஸ் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அண்ணா பல்கலைக்கழக டீன் இனியன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.