நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுச்சேரியில் ஜன. 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

News image

புதுச்சேரியில் ஜன. 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு

Updated On :16 டிசம்பர் 2020, 12:18 pm

புதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இது குறித்து பேரவையில் புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,  கரோனாவால் மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகள் ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும். அன்றிலிருந்து 1ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பினருக்கும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும்.

ஜனவரி 18-ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் வழக்கமான நேரத்தில் முழுமையாக செயல்படத் தொடங்கும். அதாவது பள்ளிகள் காலை முதல் மாலை வரை செயல்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.