ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் சோதனை: ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்
ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 4-ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை இன்று நிறைவு பெற்ற நிலையில், இதுவரை ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு காளைமாடு சிலை அருகே தங்கப் பெருமாள் வீதியில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை (டிசம்பா் 14) மாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிறுவனம் அரசின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமாக உள்ளதோடு, கட்டுமானத் தொழில் மட்டுமல்லாது பேருந்து போக்குவரத்து, மசாலா பொருள்கள் உற்பத்தி, கல்குவாரி, கட்டுமானப் பொருள்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் போன்ற பல்வேறு தொழில்களையும் நடத்தி வருகிறது.
ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளா் வீடு, முள்ளம்பரப்பு பகுதியில் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம் உள்பட 25 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா். இந்த சோதனை 4ஆவது நாளாக நீடித்து வந்த நிலையில் இன்று நிறைவு முற்பகலில் நிறைவடைந்தது.
சோதனையில் கணக்கில் வராத ரூ. 16 கோடி பணம், ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆவணங்களின் அடிப்படையில் கட்டுமான நிறுவன உரிமையாளா், அவரது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள், பணியாளா்கள் ஆகியோரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...