திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோவையில் கழிவுகளை சேகரிக்கும் 19 வாகனங்கள்: எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் கழிவுகளை சேகரிக்கும் 19 வாகனங்களின் செயல்பாட்டினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.

News image
கோவையில் கழிவுகளை சேகரிக்கும் 19 வாகனங்களின் செயல்பாட்டை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
Updated On :18 டிசம்பர் 2020, 9:52 am

DIN

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் கழிவுகளை சேகரிக்கும் 19 வாகனங்களின் செயல்பாட்டினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் 13 மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 35.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்காத கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் 5 என 18 வாகனங்கள் வாங்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அவ்வாகனங்களின் செயல்பாட்டினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசுக்கு சொந்தமான பயனற்ற கல்குவாரிகளை கண்டறிந்து மாநகர பகுதிகளில் சேகரமாகும் கட்டடக் கழிவுகளை கொண்டு குவாரிகளை புனரமைத்து பயனுள்ள நிலமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டு அதற்காக கட்டிடக் கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் மண்டலத்திற்கு ஒன்று எனும் வீதத்தில் 5 வாகனங்கள் வாங்கப்பட்டு முதல்கட்டமாக ஒரு வாகனத்தையும் அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.