சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஊத்தங்கரை அருகே 2 அம்மா மினி கிளினிக்: கேபி.முனுசாமி துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை, பா.நடுப்பட்டி, கிராமத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
ஊத்தங்கரை அருகே 2 அம்மா மினி கிளினிக்: கேபி.முனுசாமி துவக்கி வைத்தார்
Updated On :27 ஜனவரி 2024, 6:09 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை, பா.நடுப்பட்டி, கிராமத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார பணி இணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன் வரவேற்பு உரை ஆற்றினார். அதிமுக மாவட்டச் செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் தெற்க்கு ஏ.சி. தேவேந்திரன், வடக்கு வேடி, புதூர் புங்கனை உளராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி , வட்டார மருத்துவ அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினர் கேபி.முனுசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் பிகே சிவானந்தம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் இளையராஜா, மருத்துவர்கள் வெங்காடசலம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன் , தொகுதி செயலாளர் திருஞானம் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.