கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


சென்னை: கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, 15 நாள்களுக்கு மேலாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் திமுக கூட்டக் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி தர மறுத்துள்ள நிலையில், தடையை மீறி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, காங்கிரஸ் தங்கபாலு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், கூட்டணிக் கட்சித் தலைவா்கள், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட கூட்டணிக் கட்சி மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், விவசாயிகளின் நலன்களை பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. 

கரோனா தொற்று காலத்தை சாதகமாக பயன்படுத்தி அவசர, அவசரமாக வேளாண் சட்டங்களை இயற்றி விவசாயிகளை துன்படுத்தி உள்ளது. இதனை எதிர்து கடந்த 15 நாள்களுக்கு மேலாக தேசிய தலைநகர் தில்லியில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தால் தில்லி கொதித்து கொண்டிருக்கிறது.

அறவழியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு தேச விரோதிகள் என்று கூறி வருகிறது. 

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு, யாரை காப்பாற்ற இந்த வேளாண் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை. அதனை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறினார். 

தடை மீறி போராட்டம் நடைபெற்று வருவதால், அந்தப் பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com