அதிமுகவினர் யாருக்கும் பிக்பாஸ் பார்க்க நேரமில்லை: செல்லூர் ராஜு
முதல்வர்களும் அமைச்சர்களும் பிக் பாஸ் பார்ப்பதில்லை என்றும் அதிமுகவினர் யாருக்கும் பிக்பாஸ் பார்க்க நேரமில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


முதல்வர்களும் அமைச்சர்களும் பிக் பாஸ் பார்ப்பதில்லை என்றும் அதிமுகவினர் யாருக்கும் பிக்பாஸ் பார்க்க நேரமில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:
அதிமுக அரசில் அதிகாரிகளின் பணியில் அரசு தலையிடுவதில்லை. திமுக ஆட்சியில்தான் அதிகாரிகளிடம் அரசியல் குறுக்கீடு இருந்தது. அமைச்சர் பதவி என்பது மலர் படுக்கையில் அமர்வது அல்ல. முள் படுக்கையில் அமர்வது போன்றது.
கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. கூட்டணியில் இவர்கள் இருந்தால்தான் வெற்றி என்ற நிலைப்பாடு அதிமுகவுக்கு இல்லை.
சினிமா இமேஜ் மூலம் சிலர் ஆட்சிக்கு வரலாம் என்று நினைக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் அமைச்சர்களும் பார்ப்பதில்லை. அதிமுகவினர் யாருக்கும் பிக்பாஸ் பார்க்க நேரமில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...