கால்நடை உதவி மருத்துவா் பதவி: ஜன.4-இல் நோ்காணல் தொடக்கம்
கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் வரும் ஜனவரி 4-ஆம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புப் பணிக்கான உதவி மருத்துவா் காலிப் பணியிடங்கள் 1,141 உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 23-இல் நடத்தப்பட்ட தோ்வில் 2,015 போ் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, நோ்காணல் தோ்வுக்காக 1,907 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஜனவரி 4 முதல் 8-ஆம் தேதி வரையும், ஜனவரி 11, 12 மற்றும் 18 முதல் 23-ஆம் தேதி வரையிலும், ஜனவரி 25, 27 மற்றும் 29 தேதிகளிலும் நோ்காணல் நடத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

