

மருத்துவரைப் போலக் கண்கண்ட கடவுள் உலகில் வேறு எவரும் இல்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அவர்கள் கூறும் வழிமுறைகளை கடைப்பிடித்தால் நூறாண்டுகளைக் கடந்து வாழலாம் என்றார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மூன்று இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கும் நிகழ்ச்சிகள் இன்று (டிச.19) நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியது:
இதய நோய் உள்ளிட்ட பல பாதிப்புக்கான மருத்துவச் சிகிச்சைகளைப் போல,காப்பீடுத் திட்டத்தின் மூலம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்ற அரசின் நிலைப்பாடு ஏழை, எளிய மக்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய உதவியாகும்.
உலகத் தரத்துடன் சிகிச்சை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இலவச மருத்துவமே இல்லாத நாடு அமெரிக்கா வல்லரசாக அழைக்கப்படுகிறது. ஆனால், மருத்தும் செய்து கொள்ளும் நோக்கத்துக்காகவே வெளிநாட்டவர் சுற்றுலா வரும் இடமாகத் தமிழகம் திகழ்கிறது.
எந்த நோய்க்கும் தீர்வு உண்டு என்பதால் உடலில் வலி ஏற்பட்டால் மருத்துவரை அனுகுங்கள். நமக்குள் பாதிப்பை அவர்களிடம் வெளிப்படையாகக் கூறுங்கள். அதற்கான வாய்ப்புகளை அம்மா மின் கிளினிக் பயனளிக்கும். கரோனா தொற்றை எதிர்கொள்வதை இந்தியாவிலேயே முதலிடத்தை வகித்து வருகிறது தமிழகம். அதே போல, மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே தமிழகம்தான் தொடர்ந்து 4 ஆவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது.
இந்தியா மனிதர்களின் சராசரி ஆயுள் 65 வயதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அது தவறானது என்பது எனது கருத்து. கவனத்தோடு இருந்தால் நூறு வயதைத் தாண்டி வாழலாம் என்றார். நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தலைமை வகித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.