ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அதிமுக உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்

அதிமுகவின் உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:24 pm

DIN

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவின் உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. 

கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 
முன்னதாக நவம்பர் 20ஆம் தேதியும், டிசம்பர் 14ஆம் தேதியும் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.