நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் சாலை மறியல்

வேளாளர் என்கிற பெயரை மாற்றுச் சமுதாயத்தினருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளது. 

News image

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் சாலை மறியல்

Updated On :20 டிசம்பர் 2020, 4:13 pm IST


ஈரோடு: கடந்த பல ஆண்டுகளாக  பயன்பாட்டிலும் நடைமுறையிலும் இருக்கும் வேளாளர் என்கிற பெயரை மாற்றுச் சமுதாயத்தினருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேளாளர் பெயரை வழங்க முடிவு செய்துள்ள தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும் ஈரோடு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் சூரியமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டே திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏழு பிரிவுகளை உள்ளடக்கிய சமுதாயப் பிரிவுகளை உள்ளடக்கி பழைய பெயருக்கு மாற்றாக புதிதாக தேவேந்திர குல வேளாளர் என்கிற பொதுப்பெயர் வழங்கிட வேண்டும் என்கிற அவர்களது கோரிக்கையை ஏற்று அந்த பொதுப்பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற தமிழக முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன் ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, வேளாளர் என்கிற பெயரை வேறு சமுதாயப் பிரிவினர் கடந்த பல ஆண்டுகளாகவே பயன்படுத்தி அடையாளம் பெற்று வந்துள்ள நிலையில் குழப்பத்தை ஏற்படுத்திடும் வகையில் புதிதாக வேளாளர் பெயரை வேறு சமுதாயப் பிரிவினரும் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட சமுதாயப் பெயரையும், அடையாளத்தையும் தாரை வார்த்திடக் கூடாது என்றும் தமிழகத்தில் இதுபோன்ற தவறான முடிவின் அறிவிப்பால் சமூக அமைதி கெடுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும், அதுபோன்ற நிலைகள் ஏற்படாமலிருப்பதற்கு ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் சமுதாயப் பெயரை வேறு சமுதாயத்தினருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை  திரும்பப் பெற்றிட வேண்டும் என்றும், விரைவில் யாருக்கும் பாதிப்பில்லா வகையில் முடிவினை எடுத்திட வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் திடீரென மாநில அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைச் சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினரை சமாதானப்படுத்தி போராட்டத்தைத் திரும்பப் பெற வைத்து சாலையிலிருந்து அகற்றினர். இந்தப் போராட்டம் காரணமாக லக்காபுரம் சாலைப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.