கூத்தாநல்லூர்: லெட்சுமாங்குடி பிரதான சாலையில் ஆளை விழுங்கும் அகலப் பள்ளம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட லெட்சுமாங்குடி - திருவாரூர் பிரதான சாலையில், ஆளையே விழுங்கக் கூடிய அளவிற்கு ஆபத்தான நிலையில் அகலப் பள்ளம் உள்ளது.


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட லெட்சுமாங்குடி - திருவாரூர் பிரதான சாலையில், ஆளையே விழுங்கக் கூடிய அளவிற்கு ஆபத்தான நிலையில் அகலப் பள்ளம் உள்ளது.
மன்னார்குடி - திருவாரூர் பிரதான சாலை, லெட்சுமாங்குடி, ஏ.ஆர். சாலை எதிரேயுள்ளது. வெண்ணாற்றிலிருந்து லெட்சுமாங்குடி பாலம் அருகே பிரிந்து வரக்கூடிய, பாசன வாய்க்கால், பிரதான சாலையை ஒட்டினாற் போல் செல்கிறது. இந்தப் பிரதான சாலையில், திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லக் கூடிய நூற்றுக்கணக்கான பேருந்துகளும், ஆயிரக் கணக்கான வாகனங்களும் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகிறது.
மேலும் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கும் இந்த பிரதான சாலையைத் தான் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பிரதான சாலையில் செல்லக் கூடிய இந்த பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக மூடப்படாமல் திறந்த நிலையில், பெரும் ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வகையில் உள்ளன.

வர்த்தக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த இப்பகுதியில் கடைகளின் முன்பாகவே திறந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், பெரும் பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தில் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடைகிறார்கள். உடனே சம்பந்தப்பட்ட நிர்வாகம் கவனித்து பாசன வாய்க்காலுக்கு தடுப்புச் சுவர் எழுப்பி, பொதுமக்களுக்கு பாதுக்காப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என கூத்தாநல்லூர் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் கூறியது:
வெண்ணாற்றிலிருந்து, பிரிந்து வரக்கூடிய இந்த பாசன வாய்க்கால் மேலபனங்காட்டாங்குடி, கீழப்பனங்காட்டாங்குடி ஆகிய கிராமங்களின் பாசனத்திற்கான வாய்க்காலாகும். மேலும் இந்த வாய்க்கால், வேளுக்குடி வெள்ளியாற்றில் கலந்து விடுகிறது. இங்கிருந்து செல்லக் கூடிய வாய்க்கால், வெள்ளியாறு வரை செல்ல முடியாத நிலையில் உள்ளது. நடுவில் அடைப்பு உள்ளதாகத் தெரிகிறது. பாசன வாய்க்காலில் கழிவுகள் கலக்கப்பட்டு, தற்போது சாக்கடை போல ஓடுகிறது. இதுவே, தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளன. மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர். சாலை எதிரே பாசன வாய்க்காலின் ஓரத்தில் குடிசைகள் இருந்தது. அந்தக் குடிசைகள் அகற்றப்பட்ட பிறகு, பாசன வாய்க்கால் திறந்த நிலையில் பாதுகாப்பில்லாமல் தான் உள்ளன. உடனே, நகராட்சி நிர்வாகம் இந்தப் பாசன வாய்க்காலை சுத்தப்படுத்தி, தடுப்புச் சுவர் அல்லது தடுப்புக்கான இரும்புக் கம்பிகளை அமைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...