

வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்கக்கூடாது என்று கோரி கோவையில் நான்கு திசை வேளாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
கோவையில் நான்கு திசை வேளாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவை தெற்கு தாலுகா செஞ்சிலுவைச் சங்கம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் நான்கு சமூகத்தை சேர்ந்தவர்கள் ’வேளாளர்’ என்ற பெயரை புனைப்பெயராக வைத்துள்ளனர். இந்த சூழலில், வேளாளர் என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கும் வழங்குவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு திசை வேளாளர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, வேளாளர் என்ற பெயரை மற்று சமூகத்தினருக்கு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மாநில கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி ராஜேந்திரன், நான்கு திசை வேளாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கொங்கு கே. தேவராஜ், காப்பாளர் கே.ஆர் சிவதேசிகன் பிள்ளை, மாநில அமைப்பாளர் நாட்டாமை மணிவண்ணன், சோழிய வேளாளர் சங்கத் தலைவர் ஏ. ஜெகதீசன், 3 மந்தை 84 ஊர் சோழிய வேளாளர் சங்கத்தின் தலைவர் கே. பழனிசாமி, மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர் சேலம் பி.ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர்கள் அணிச் செயலாளர் என்.மணிவண்ணன், கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரசாந்த் மற்றும் 40 ஜாதிகளின் தலைவர் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.