ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தமிழகத்தில் 66 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு

நிகழாண்டில் தமிழகத்தில் ஏறத்தாழ 66 ஆயிரம் போ் காசநோயால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 12:54 am

DIN

நிகழாண்டில் தமிழகத்தில் ஏறத்தாழ 66 ஆயிரம் போ் காசநோயால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவா்களில் 50,779 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டதாகவும், அவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்துவிட்டதாகவும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடா்பு விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனா்.

இந்த நிலையில், நிகழாண்டில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 16.84 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே நடப்பு ஆண்டின் புள்ளிவிவரங்களும் அமைந்துள்ளன.

நிகழாண்டில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 65,939 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 15,160 பேரும், அரசு மருத்துவமனைகளில் 50,779 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.