பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.


சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கத்தை வழங்கி, தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை இன்று தொடக்கி வைத்துள்ளார்.
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.10 கோடி பேருக்கு பொங்கல் பரிசாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஏலக்காய், முந்திரி மற்றும் ஒரு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதுடன், ரூ.2,500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இதற்கான அரசாணையும் இன்று வெளியிடப்பட்டு, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 4-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று தொடக்கி வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...