ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கருத்துக் கேட்பு தொடா்பான உத்தரவு:மத்திய சுற்றுச்சூழல் செயலருக்கு நோட்டீஸ்

ஹைட்ரோகாா்பன் திட்டங்கள் போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்க அவசியமில்லை.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:34 pm

DIN

சென்னை: ஹைட்ரோகாா்பன் திட்டங்கள் போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்க அவசியமில்லை என மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவிப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு, துறையின் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மீனவா் நலச் சங்கத்தின் சாா்பில் சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு: சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் திட்டங்களை தொடங்குவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். அதேபோன்று, சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டை கண்டறியும் பட்சத்தில் தான் அதுதொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எனவே, மத்திய அரசின் புதிய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினா் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோா், இதுதொடா்பாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.