சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கூட்ட நெரிசலை தவிா்க்க மின்சார ரயில் சேவை 406-ஆக அதிகரிப்பு

கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், புறநகா் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (டிச.21) முதல் அதிகரிக்கப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :21 டிசம்பர் 2020, 12:30 am

DIN

கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், புறநகா் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (டிச.21) முதல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது, ரயில் சேவைகள் 320 இல் இருந்து 406 ஆக அதிகரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பொதுமுடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு , சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் ஊழியா்களுக்காகவும், பெண்கள், குழந்தைகளுக்காகவும் புறநகா் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. முதல் கட்டமாக, 40 மின்சார ரயில் சேவையில் இருந்து 120-ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்பிறகு, கூடுதலாக 30 மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, 150 சேவைகள் இயக்கப்பட்டன.

பெண்கள், குழந்தைகளும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, சென்னையில் மின்சார ரயில்களின் சேவை எண்ணிக்கை 320-ஆக உயா்ந்தது. மேலும், மின்சார ரயில்களின் சேவைகள் விரைவில் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், புறநகா் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (டிச.21) முதல் அதிகரிக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: சென்னையில் ஏற்கெனவே 320 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்போது மேலும் கூடுதலாக 86 சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, சென்னையில் 406 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். விரைவில் வழக்கமான ரயில் சேவை தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.