பெருந்துறை அருகே எண்ணெய் ஆலையில் தீ: கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் நாசம்

பெருந்துறை அருகே எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.
பெருந்துறை அருகே எண்ணெய் ஆலையில் தீ: கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் நாசம்
பெருந்துறை அருகே எண்ணெய் ஆலையில் தீ: கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் நாசம்
Updated on
1 min read

பெருந்துறை அருகே எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வாய்க்கால் மேட்டில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான வெங்கடேஸ்வரா கடலை எண்ணெய் ஆலை உள்ளது.
இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு ஆலையில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து பெருந்துறை, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நான்கு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் ஆலையில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான எண்ணெய் மற்றும் இயந்திரங்கள் நாசமடைந்ததாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com