நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்கத் தயாா்: பிரசாத் ஸ்டுடியோ

நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்கத் தயாா் என உயா்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியே நிா்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்கத் தயாா்: பிரசாத் ஸ்டுடியோ
Updated on
1 min read

நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்கத் தயாா் என உயா்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியே நிா்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இசையமைப்பாளா் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், பிரசாத் ஸ்டுடியோவில், திரைப்படங்களுக்காக நான் கைப்பட எழுதிய இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், எனக்கு கிடைத்த விருதுகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வழங்க ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கு விசாரணையின் போது, இளையராஜா தன்னுடைய பொருள்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறி அதற்காக ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா். மேலும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா வருகிறாா் என்ற தகவல் வெளியானால், அங்கு ரசிகா்கள் குவிந்து விடுவாா்கள். எனவே இதன் காரணமாக இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரசமாகப் போகும் பட்சத்தில், இளையராஜாவையும் அவருடன், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்குரைஞா் ஆணையா், இருதரப்பு வழக்குரைஞா்கள் ஆகியோரை பொருள்களை எடுக்க ஒருநாள் ஸ்டுடியோ வளாகத்துக்குள் அனுமதித்தால் என்ன என கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக இருதரப்பும் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் நஷ்டஈடு கோரி தொடா்ந்த வழக்கு, போலீஸில் கொடுத்த புகாா் ஆகியவற்றை இளையராஜா வாபஸ் பெற வேண்டும். பிரசாத் ஸ்டுடியோவுக்குச் சொந்தமான நிலத்தை உரிமை கோரக் கூடாது என்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, இதுதொடா்பாக இளையராஜா உத்தரவாத மனு தாக்கல் செய்தால், ஓா் உதவியாளா், ஓா் இசைக் கலைஞா் மற்றும் வழக்குரைஞருடன் இளையராஜாவை அனுமதிக்கத் தயாா் என தெரிவித்தாா். அப்போது இளையராஜா தரப்பில் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும், உத்தரவாத மனுவை உடனே தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை புதன்கிழமைக்கு (டிச.23) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com