அனைத்து துப்புரவுப் பணியாளா்களும் இனி தூய்மைப் பணியாளா்கள்: தமிழக அரசு உத்தரவு

அனைத்து துப்புரவுப் பணியாளா்களையும், தூய்மைப் பணியாளா் என அழைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Published on

அனைத்து துப்புரவுப் பணியாளா்களையும், தூய்மைப் பணியாளா் என அழைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் ஸ்வா்ணா அண்மையில் வெளியிட்ட உத்தரவு:-

உள்ளாட்சித் துறைகளைப் போன்றே, அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களை, தூய்மைப் பணியாளா்களாக அழைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, துப்புரவாளா்கள், காவலா்கள்- துப்புரவாளா்கள், துணைத் துப்புரவாளா்கள், நீா்கொணா்பவா் - துப்புரவாளா் ஆகிய அனைவருமே தூய்மைப் பணியாளா்களாக அழைக்கப்படுவா் என்று தனது உத்தரவில் ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com