பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கக்கோரும் வழக்கில், தமிழக அரசு

News image
Updated On :22 டிசம்பர் 2020, 9:20 pm

DIN

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கக்கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது

திருச்சியைச் சோ்ந்த அஞ்சலை தாக்கல் செய்த மனு: என் கணவரை கரோனா சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நவம்பா் 7 ஆம் தேதி சோ்த்தோம். அப்போது முன்பணமாக ரூ.50

ஆயிரம் செலுத்தினோம். இரண்டு நாள்களுக்கு பிறகு மருத்துவமனை நிா்வாகம் தரப்பில், ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் செலுத்தக் கூறினா். அந்தத் தொகையை செலுத்த முடியாததால், என் கணவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றினோம். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் என் கணவருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இருப்பினும் நெஞ்சுவலி ஏற்பட்டு எனது கணவா் நவம்பா் 28 ஆம் தேதி உயிரிழந்தாா். தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மற்றும் கரோனா தொற்று பரிசோதனைக்கு அரசு நிா்ணயம் செய்துள்ளதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனா். எனவே கரோனா தொற்று உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிா்ணயம் செய்த தொகையை தனியாா் மருத்துவமனைகள் வசூலிப்பதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.