மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஓய்வுபெற்ற மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் ஆயுள்கால சான்றிதழை சமர்ப்பிக்க

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்களது ஆயுள்கால சான்றிதழை பணிமனையிலேயே சமர்ப்பிக்கலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கு. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

News image
ஓய்வுபெற்ற மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் ஆயுள்கால சான்றிதழை சமர்ப்பிக்க
Updated On :23 டிசம்பர் 2020, 5:34 am

DIN

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்களது ஆயுள்கால சான்றிதழை பணிமனையிலேயே சமர்ப்பிக்கலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கு. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 22,000 மேற்பட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 13,700-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்றுள்ளோர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியதாரர்கள், ஒவ்வொரு ஆண்டும், தங்களது ஆயுள்காலச் சான்றிதழை இப்போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகிறார்.

ஓய்வுபெற்றோரின் வயது முதிர்வு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, தங்களது ஆயுள்காலச் சான்றிதழை இனிவரும் காலங்களில், தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம் / பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரித் திங்கள் தொடங்கி, மார்ச்த் திங்கள் 15-ஆம் தேதிக்குள்ளாக, அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்திலும், பட்டுலாஸ்சாலை தொழிற்கூடத்தில் (பிஆர்டி), மண்டல தொழிற்கூடத்தில் (ஆர்டபிள்யுஎஸ்) ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், அந்ததந்த அலுவலகத்தில் ஆயுள்கால சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகத்தில் (கேகே நகர் பிரிண்டிங் பிரஸ்) ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் கே.கே.நகர் பணிமனையிலும், குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் (குரோம்பேட்டை வொர்க் ஷாப்) ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் தங்களின் ஆயுள்கால சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விடுபட்டவர்கள் தலைமையலுவலகத்தினை அணுகி, தங்களின் ஆயுள்காலச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஓய்வூதியப் பிரிவு 044-2345 5801 - விரிவாக்கம் 268 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.