கீழையூரில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி கீழையூர் கடைத்தெரு பகுதியிலுள்ள எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்
கீழையூர் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
கீழையூர் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
Updated on
1 min read

தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி கீழையூர் கடைத்தெரு பகுதியிலுள்ள எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரும் கீழ்வேளூர் முன்னாள் தொகுதி செயலாளருமான எஸ்.பால்ராஜ் தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து ஈசனூர் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர்-யின் திருவுருவச் சிலைக்கு கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளரும் பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பாலை.கே.எஸ்.எஸ். செல்வராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் இந்நிகழ்வில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் என். மீனா, ஒன்றியக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன்,அம்மா பேரவை கீழையூர் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சதீஷ்,அண்ணா தொழிற்சங்க  மாவட்ட இணை செயலாளர் வீ. திருஞானசம்பந்தம் , ஊராட்சி மன்ற தலைவர்களான கீழையூர் ஆனந்தஜோதிபால்ராஜ், ஈசனூர் தனலெட்சுமிவெங்கடபதி, கீழையூர் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்  அந்தோணிராஜ், 
உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com