பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஈரோட்டில் அதிமுக சார்பில் பெரியார், எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33 ஆவது நினைவு தினம், தந்தை பெரியாரின் 47-வது தின விழாவையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை, பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News image
ஈரோட்டில் அதிமுக சார்பில் பெரியார், எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
Updated On :24 டிசம்பர் 2020, 8:12 am

DIN

ஈரோடு:  முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33 ஆவது நினைவு தினம், தந்தை பெரியாரின் 47-வது தின விழாவையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை, பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் பெரியார்  திருவுருவச் சிலைக்கு   முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர்,  மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.வி.ராமலிங்கம்,  ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு  ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. சி .ராமசாமி, முன்னாள் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம், மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரதீப்,  மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால். ஆவின் துணை தலைவர் குணசேகர், ஒன்றிய கழகச் செயலாளர் பூவேந்திரன், பகுதி செயலாளர்கள்  ஜெகதீசன், இரா. மனோகர், கே சி பழனிச்சாமி, கேசவமூர்த்தி, தங்கமுத்து, ஜெயராஜ், கோவிந்தராஜன்,  முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் ,   உட்பட நூற்று க்கும்  மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் விழாவில் பெரியார் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.