

விழுப்புரம் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு காலை 5 மணிக்கு நடைபெற்றது.
விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமபத வாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வைகுண்டவாசப் பெருமாள் பக்தர்கள் காட்சியளித்தார். கோவிந்தா முழக்கங்களுடன் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழுப்புரம் அருகே பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தில் காட்சியளித்த லட்சுமி நரசிம்ம பெருமாள்.
கீழ் பெரும்பாக்கம் ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பக்தர்கள் காட்சி அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கெங்கவரம் சீனிவாசப்பெருமாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி.
திண்டிவனம் அருகே செண்டுர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், கூட்டேரிப்பட்டு ரங்கநாதர் பள்ளிகொண்ட பெருமாள் கோவிலிலும், பிரசித்தி பெற்ற வானூர் அருகே உள்ள பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் வரதராஜர் சன்னதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 4. 45 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி சன்னதி சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் காட்சியளித்த ராமச்சந்திர மூர்த்தி.
நிகழாண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு கரோனா பொது முடக்க தடை விதிக்கப்பட்டதால் குறைந்தளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து 6 மணிக்கு மேல் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு முடிந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.