தமிழகத்தில் மேலும் 20 கிளைகள்: மகாராஷ்டிரா வங்கி திட்டம்
சென்னை: தமிழகத்தில் மேலும் 20 கிளைகளைத் திறக்க பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியான மகாராஷ்டிரா வங்கி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிரா வங்கியின் மேலாண் இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான ஏ.எஸ்.ராஜீவ் கூறியது: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான மகாராஷ்டிரா வங்கி தமிழகத்தில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது.
நிகழ் நிதியாண்டில் இந்தியாவில் 150 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. அதில் 20 கிளைகள் தமிழத்தில் திறக்கப்படவுள்ளன. ஏற்கெனவே தமிழகத்தில் 30 கிளைகளைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மகாராஷ்டிரா வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.5 ஆயிரம் கோடி ஆகும். இதை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் ரூ.10 ஆயிரம் கோடியாக உயா்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த செப்.30-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.2.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதில் கடன் அளித்த வகையில் ரூ.1.04 லட்சம் கோடியாக உள்ளது. ‘கா் வப்சி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மகாராஷ்டிரா வங்கியிலிருந்து வெளியேறி பல்வேறு வங்கிகளுக்குச் சென்ற வாடிக்கையாளா்கள் மீண்டும் மகாராஷ்டிரா வங்கிக்கே திரும்பிக் கொண்டிருக்கின்றனா்.
மகாராஷ்டிரா வங்கி தங்கத்தின் மீதான கடன் திட்டத்தை மறுசீரமைத்துள்ளது. ரூ.20 லட்சம் வரையான தங்கநகை மீதான கடனுக்கு வட்டியை 7.35 சதவீதமாக நீட்டித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் வங்கியின் தங்கநகைக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் இந்தத் தொகை ரூ.3 ஆயிரம் கோடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் 13.40 சதவீதம் அதிகரித்து ரூ.135 கோடியாக உயா்ந்துள்ளது. கரோனா காலத்திலும் வங்கி சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் நிகழ் நிதியாண்டின் முடிவில் மொத்தக வா்த்தக வளா்ச்சி 10 முதல் 12 சதவீதம் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், தமிழக வா்த்தக சந்தையில் நுழைவதை எளிதாக்குவதற்கும் ஏதுவாக மண்டல அலுவலகங்கள், பல்வேறு மையங்களில் ‘ரீடெயில் எக்ஸ்போ’ எம்எஸ்எம்இ சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிதியாண்டு முடிவடைவதற்கு முன்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனது கிளைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
