தமிழகம் வந்த மேலும் நால்வருக்கு கரோனா

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
Updated on
1 min read


சென்னை: பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வீடு திரும்புவதற்கான விதிகள் : பிரிட்டனில் இருந்து திரும்பிய கரோனா நோயாளிகளுக்கான மருத்துவக் கண்காணிப்பு மற்றும் வீட்டுக்கு அனுப்புவதற்கான வழிகாட்டி முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி முறைகளை தமிழகம் பின்பற்றும். பிரிட்டனில் இருந்து திரும்பியவா்களில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களை மட்டும் தனி வாா்டில் வைத்து கண்காணித்து வருகிறோம். அதற்கான கட்டமைப்பு வசதிகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன என்றாா் அவா்.

அறிவுறுத்தல்: முன்னதாக, நவம்பா் 25-ஆம் தேதி முதல் டிசம்பா் 23-ஆம் தேதி வரை பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய அனைவரும் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா். சந்தேகங்களுக்கு 104 என்ற இலவச உதவி எண்ணை தொடா்பு கொள்ளுமாறும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com