திருச்சி பாரதிதாசன் பல்கலை. உதவி பேராசிரியா் நியமன அறிவிப்பாணை ரத்து: உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி பேராசிரியா் நியமனம் தொடா்பான அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலை. உதவி பேராசிரியா் நியமன அறிப்பாணை ரத்து: உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை
திருச்சி பாரதிதாசன் பல்கலை. உதவி பேராசிரியா் நியமன அறிப்பாணை ரத்து: உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை
Updated on
1 min read

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் பாலமுருகன் தாக்கல் செய்த மனு:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 உதவிப் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், நியமனம் தொடர்பாக 8.7.2019-Fல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணை கடந்த 20 ஆண்டுகளாக வெளியிடப்பட்ட வரும் அறிவிப்பாணைகளில் இருந்து மாறுபட்டு உள்ளது.

அறிவிப்பாணையில் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் காலி பணியிடங்கள், இடஒதுக்கீட்டு பணியிடங்கள், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை அறிவிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் மொத்த பணியிடத்துக்கும் ஒரே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, இடஒதுக்கீட்டு விதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாகவும், விதிகளை பின்பற்றி அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com