நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சங்ககிரி ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு 

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோவிலில் வைகுந்த ஏகாதசியையொடட்டி பரமபதவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

News image

ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப்பெருமாள்

Updated On :25 டிசம்பர் 2020, 5:49 am

DIN


சங்ககிரி: சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோவிலில் வைகுந்த ஏகாதசியையொடட்டி பரமபதவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

வைகுந்த  ஏகாதசியையொட்டி ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோவிலில் அருள்மிகு வசந்தவல்லபராயப்பெருமாள் சுவாமிக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்தி சுவாமி கருடவாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டார். 

பின்னர் மார்கழி மாத தினசரி வழிபாடான திருப்பாவை பாடல்களை பாடிய பின்னர் சுவாமி அதிகாலை பரமபதவாசல் வழியாக  வெளியே வந்தார். வெளியே வந்த சுவாமியை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க  வரவேற்று வழிபட்டனர்.  

அதனையடுத்து  அர்ச்சகர்கள் சுவாமி பரமபதவாசல் வழியாக வந்தப்பின்னர் பெருமாள் சிறப்பு பக்தி பாடல்களை பாடினர்.  இதனையடுத்து  சுவாமி கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்து ஆலயத்தை அடைந்தது.  இதனையடுத்து பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.