சுனாமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் 16 ஆவது ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
சுனாமி தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ​
சுனாமி தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ​
Updated on
1 min read



தூத்துக்குடி: தூத்துக்குடியில் 16 ஆவது ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழகத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலத்த பொருள்சேதமும் ஏற்பட்டது. பலர் தங்கள் உடமைகளையும் இழந்தனர். ஆண்டுதோறும் இந்தநாள் சுனாமி நினைவு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

சுனாமி பேரழிவு ஏற்பட்டு 16வது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடியில் உள்ள நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

மேலும் இந்த சுனாமி ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

மேலும் கடலில் சுனாமி போல இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவேண்டும் என கடல் தாய்க்கு மலர் தூவியும் பால் உற்றி மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com