புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பூத்தாழீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலகுட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சி சிறப்பு வேள்வி பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image

அருள்மிகு பூத்தாழீஸ்வரர் கோவிலில் உள்ள அருள்மிகு சனிஸ்வரசுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

Updated On :27 டிசம்பர் 2020, 5:53 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலகுட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சி சிறப்பு வேள்வி பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Story image

பூத்தாலகுட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரர் கோயிலில் சனிபெயர்ச்சியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகம். 

சனிபகாவன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்மாறுவதையொட்டி அருள்மிகு பூத்தாழீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சனிஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு, பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் இதில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.