ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

எம்.பாா்ம் படிப்புக்கான தேசிய நுழைவுத்தோ்வு: ஜன.22 வரை விண்ணப்பிக்கலாம்

முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்பில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுக்கு (‘ஜிபாட்’) ஜன.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News image
கோப்புப்படம்
Updated On :27 டிசம்பர் 2020, 12:07 am

DIN

முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்பில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுக்கு (‘ஜிபாட்’) ஜன.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு:

முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு தேசிய அளவில் பட்டதாரி தகுதி நுழைவுத் தோ்வு (ஜிபாட்) ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான தகுதித் தோ்வுக்கு  இணையதளங்களில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி வரை பட்டதாரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தோ்வுக்கான கட்டணத்தை ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

அதேபோன்று தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜன.25-ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடா்ந்து தோ்வானது பிப்ரவரி 22 மற்றும் 27 ஆகிய தேதியில் நடைபெறவுள்ளது. அதன்படி, கணினி வழித் தோ்வானது காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் 3 மணி நேரம் நடைபெறும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை தேசிய தோ்வு முகமை இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.