ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஊனமுற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை: காவல்துறையைக் கண்டித்து தாய், சிறுமி தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி அருகே ஊனமுற்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய்-மகள் தற்கொலை முயற்சி.

News image
குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து தாய், சிறுமி தீக்குளிக்க முயற்சி
Updated On :28 டிசம்பர் 2020, 12:20 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம் அயன் பொம்மையா புரத்தில் ஊனமுற்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய்-மகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.       

தூத்துக்குடி மாவட்டம் அயன் பொம்மையா புரத்தை சேர்ந்தவர் முனியம்மாள் இவரது 14 வயது ஊனமுற்ற மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கடந்த 15ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது சம்பந்தமாக விளாத்திகுளம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து போக்சோ சட்டத்தில்  சிறையில் அடைத்தன. 

ஆனால் ஐயப்பனை ஜாமீனில் கொண்டுவரும் நடவடிக்கையில் காவல்துறையினர் சிலர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து முனியம்மாள் தனது மகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.