கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முதுமலை புலிகள் காப்பகத்தில் காயத்துடன் சுற்றித் திரிந்த யானைக்கு சிகிச்சை

முதுமலை புலிகள் காப்பகத்தில காயத்துடன் அவதிப்பட்ட யானையை வதைதுறையின் பிடித்து சிகிச்சையளிக்கத் துவங்கியுள்ளனன

News image

முதுமலை புலிகள் காப்பகம்

Updated On :28 டிசம்பர் 2020, 1:09 pm

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில காயத்துடன் அவதிப்பட்ட யானையை வதைதுறையின் பிடித்து சிகிச்சையளிக்கத் துவங்கியுள்ளனனர்.

'முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச்சரகத்திற்குள்பட்ட பொக்காபுரம் வனத்தில் சுமார் 40 வயதுடைய ஆண் யானை முதுகில் காயத்துடன் வேதனையில் அப்பகுதியில் சுற்றித் திரிந்தது. தகவலறிந்த வனத்துறை சிகிச்சையளிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். 

Story image

கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சுகுமாறன், ராஜேஷ் குமார், கோச்சலன் ஆகியோர் அடங்கிய குழு கும்கி யானைகள் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை முதல் யானையைச் சுற்றி வளைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இன்று காலை யானையின் இருப்பிடத்தை அறிந்த வனத்துறையினர். கும்கிகள் உதவியுடன் சமதளத்திற்கு விரட்டி வந்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசியைச் செலுத்தினர். பிறகு கும்கிகள் அந்த யானையை இழுத்து வந்து ஒரு இயந்திரத்தில் நிறுத்தியதும் கால்நடை மருத்துவக் குழு சிகிச்சையைத் துவங்கியது.

Story image

புலிகள் காப்பக வெளிவட்ட கள துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தலைமையில் சிங்காரா வனச் சரக அலுவலர் காந்தன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அடங்கிய குழு தொடர்ந்து யானையைக் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.