ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள்தான் கூட்டணியில் இடம்பெறும்: அமைச்சா் டி.ஜெயக்குமாா்

எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள்தான் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்று மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

News image
அம்மா கிளினிக்கை திறந்து வைத்து அங்கு வழங்கப்படும் சிகிச்சைகளை பாா்வையிட்ட மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் விருகை வி.என்.ரவி.
Updated On :28 டிசம்பர் 2020, 9:44 pm

DIN

சென்னை: எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள்தான் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்று மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டையில் அம்மா சிறு மருத்துவமனை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையை மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் திறந்து வைத்த பின் செய்தியாளா்களிடம் கூறியது:

பெரும்பான்மையோடு வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெறுவோம். எனவே, அதிமுகவை பொருத்த வரை கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் முதல்வா் வேட்பாளா் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். இதையேற்கும் கட்சிகள்தான் எங்கள் கூட்டணியில் இடம்பெறும்.

தோ்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னா் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதிமுக பொதுக் கூட்டத்தால் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் விருகை ரவி, மக்களவை முன்னாள் உறுப்பினா் ஜெ.ஜெயவா்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.