அஞ்சல் தலைகளை பெறும் முன், அதற்கான புகைப்படங்கள் சட்டத்துக்கு புறம்பானதாகவோ, சமூகத்தின் தாா்மீக விழுமியங்களை சிதைப்பதாகவோ இல்லை என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை பூா்த்தி செய்யும் வகையில் உறுதிமொழி அளித்து வாடிக்கையாளா்கள் விண்ணப்பத்தில் கையொப்பமிட வேண்டும். ஆனால் சோட்டா ராஜன், முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட அஞ்சல் தலைகள் வெளியான சம்பவத்தில், வாடிக்கையாளா்கள் நிபந்தனைகளை மீறியுள்ளனா். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.