திருச்சியில் 10 இடங்களில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை


திருச்சி: சிஐடியு சார்பில், திருச்சியில் 10 இடங்களில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின்வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். வேலை நேரத்தை உயர்த்தி, நிரந்தரத் தொழிலாளர்களே இல்லாமல் செய்யும் வகையிலான தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையிழந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் 6 மாதம் தலா ரூ.7,500 ஊதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக உயர்த்துவதுடன், நாளொன்றுக்கு ரூ.700 ஊதியமாக வழங்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் இத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரம் இருமுறை எரிவாயு விலையை நிர்ணயம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில், திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ரங்கராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
காந்திசந்தை 3ஆம் நுழைவு வாயில்முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட தலைவர் ராமர், துணைத் தலைவர் செல்வராஜ், பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, மிளகுபாறை, சிந்தாமணி அண்ணாசிலை, ஜங்ஷன், புங்கனூர், திருவெறும்பூர், திருவரங்கம், குட்ஷெட் பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு நிர்வாகிகள், தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...