சென்னை: பல்லாவரத்தில் உள்ள புத்தேரி ஏரிப் பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் இன்று காலை கண்விழித்த போதே அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
மிகப்பெரிய புத்தேரியில் மலைபோல் குப்பைக்கூளம் கொட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
இந்த ஏரி சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இது கடந்த ஆண்டுதான் சமூக ஆர்வலர்களால் தூர்வாரப்பட்டு, தற்போது பெய்த மழையால் முழுவதும் நிரம்பி, மிக அழகாகக் காணப்பட்டது.
ஆனால், அனைத்தும் ஒரே நொடியில் வீணாகிவிட்டது. சுமார் 25 அடிக்கு ஏரியின் பாதியளவுக்கு குப்பைக் கொட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அப்பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடபட்டனர். இதனால் அங்கு காவலர்களும் விரைந்து ஏரியை ஆய்வு செய்தனர்.
இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை இந்த ஏரியில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதில் நகராட்சிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம், இல்லையென்றால் இந்த அளவுக்கு குப்பைக் கழிவுகள் எங்கிருந்து வரும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால், பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளோ, இந்தக் குப்பைக் கழிவுகளை தாங்கள் கொட்டவில்லை என்றும் யார் கொட்டினார்கள் என்று தெரியாது, எங்களது குப்பைக் கழிவுகள் அனைத்தும் கொடுங்கையூர் கொண்டு செல்லப்படுவதாகவும், காவல்துறையினர்தான் இதனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


