விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பம்பை அபிஷேக விழா 

கிருஷ்ணகிரி அடுத்த அருள்மிகு பெண்னேஸ்வர திருக்கோவில் வளாகத்தில் ஸ்ரீ நந்தீஸ்வரா பம்பை அபிஷேக கலை குழுவின் சார்பில் ஏழாம் ஆண்டு பம்பை அபிஷேக கலைவிழா இன்று நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 10:55 am

DIN

கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டணம், பெண்னேஸ்வர மடத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெண்னேஸ்வர திருக்கோவில் வளாகத்தில் ஸ்ரீ நந்தீஸ்வரா பம்பை அபிஷேக கலை குழுவின் சார்பில் ஏழாம் ஆண்டு பம்பை அபிஷேக கலைவிழா இன்று நடைபெற்றது.

Story image

இந்த விழாவிற்கு எம்.குருமூர்த்தி தலைமை வகித்தார். இந்த விழாவில் கலை பண்பாட்டுத்துறை சேலம் மண்டல பா.ஹேமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பம்பை இசைக்கருவி எண்ணெய், பால், தேன், பன்னீர், இளநீர் குங்குமம், சீக்காய், ஆகியவற்றின் மூலம் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

Story image

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தி பாடல் கலை நிகழ்ச்சி மங்கல இசை நிகழ்ச்சி பம்பை கலைநிகழ்ச்சி அம்மன் நடனம் கோலாட்டம் தப்பாட்டம் கோலாட்டம் கொம்பு வாக்கியம் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி மாடு ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.