
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்: செங்கோட்டையன்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் (கோப்புப்படம்)
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தமிழகத்தில் கல்லூரிகள் மட்டும் கடந்த நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே பள்ளிகள் திறப்பு குறித்து இறுதியான முடிவு எதுவும் வெளியாகாத நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வகுப்புகளுக்கு முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளித்தவுடன் அதற்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






