பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜவினர் போராட்டம் 

சேரன்மகாதேவியில் பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக விவசாய அணி சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
பாஜக விவசாய அணி சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.


அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவியில் பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக விவசாய அணி சார்பில் கன்னடியன் கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியும், பாபநாசம் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியும் விவசாயம் செய்து வரும் நபர்களிடமிருந்து கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை பறிமுதல் செய்யக் கோரியும், அகஸ்தியர் பட்டியில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இடம் எனக்கூறி அரசு நிலத்தை குத்தகைக்கு விட்டு கட்டிடம் கட்டுவதை தடுத்து நிறுத்த கோரியும், சிவந்திபுரத்தில் சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியார் கட்டிடம் கட்டுவதை நிறுத்தக் கோரியும், சிவந்திபுரம் ஊராட்சியில் வாடகைக்கு குடி இருப்பவர் களிடம் எந்தவித ஆவணங்களும் இன்றி ரசீது வழங்குவதைக் கண்டித்தும் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களைப் பறிமுதல் செய்யக் கோரியும் பாஜக விவசாய அணி மாவட்டத் தலைவர் பொன்ராஜ் தலைமையில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களிடம் சார் ஆட்சியர் பிரதிக் தயாள் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து கோரிக்கைகளின் மீதும் ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

நிகழ்ச்சியில், பாஜக விவசாய அணி மாநில செயலர் ஜெயக்குமார், மாவட்ட பார்வையாளர் கந்தசாமி, அம்பாசமுத்திரம் ஒன்றிய விவசாய அணி தலைவர் செல்வராஜ், ஓபிசி அணி மாவட்ட தலைவர் சண்முகவேல் மற்றும் விவசாயி தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com