சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னை விமானநிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் இருவேறு நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :4 பிப்ரவரி 2020, 7:46 am

DIN


சென்னை விமானநிலையத்தில் இருவேறு நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த காசர்கூடு பகுதியைச் சேர்ந்த அகமது சலீக் (22) மற்றும் ஸ்ரீஜித் (23) ஆகிய இருவரிடமும் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது ஷூவில் மறைந்து வைக்கப்பட்டிருந்த ரூ.28 லட்சம் மதிப்பிலான 663 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த மலேசியாவைச் சேர்ந்தப் பெண், ராஜா சலுஜா நாகராஜன் (37) என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 16.71 லட்சம் மதிப்புடைய 396 கிராம் எடைக் கொண்ட 4 தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 1.06 கிலோ ஆகும். இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.