/

நடிகர் ரஜினிகாந்த் பல கனவுகள் கண்டு வருகிறார்; ஆனால் எதுவும் நிறைவேறவில்லை: தொல்.திருமா பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் பல கனவுகள் கண்டு வருகிறார்; ஆனால் எதுவும் நிறைவேறவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். 

News image
Updated On :9 பிப்ரவரி 2020, 8:11 am

நடிகர் ரஜினிகாந்த் பல கனவுகள் கண்டு வருகிறார்; ஆனால் எதுவும் நிறைவேறவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 'தேசம் காப்போம்' நிகழ்ச்சி ராஜபாளையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் பல கனவுகள் கண்டு வருகிறார்; ஆனால் எதுவும் நிறைவேறவில்லை என்று கூறினார். 

பின்னர் நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது குறித்து, விஜயை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆளும் கட்சி செய்யும் ஒரு பிளாக் மெயில் என்று தான் நினைப்பதாகத் தெரிவித்தார். 

மேலும், 'படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவது புதிதாக உள்ளது. வருமானவரித்துறையினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல' என்றார். 

அதைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி மூலமாக நடந்த தேர்வுகள் குறித்து மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்றும் தீவு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.